இன்று ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2-வது தவணை ஹைதராபாத் வந்தது..!

2-வது கட்டமாக இன்று தனிவிமானத்தில் ஹைதராபாத்திற்கு ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன.

கொரோனாவின் இரண்டாவது அலைக்கு எதிராக தற்போது இந்தியாவில் கோவாக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது மருந்தாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இந்தியாவில் இறக்குமதி செய்து வழங்கி வருகிறது. ரஷ்யா தடுப்பூசியான 1.5 லட்சம் ஸ்புட்னிக் V முதல் தொகுதி ஹைதராபாத்திற்கு கடந்த 1-ஆம் தேதி வந்து சேர்ந்தது. இந்நிலையில், 2-வது கட்டமாக இன்று தனிவிமானத்தில் ஹைதராபாத்திற்கு ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன.

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசி விலை ரூ. 995.40-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி  விலையான ரூ.948 எனவும் அதனுடன் 5% ஜிஎஸ்டி வரி சேர்த்து விற்பனை விலை ரூ. 995.40 என  டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
murugan