#Breaking:இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு..!

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவத்திற்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ்,ஆர்டெம் படபூட்டியன் ஆகிய இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு “வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டுபிடித்ததற்காக” இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது,வெப்பம்,வலி,உடல் அழுத்தம் ஆகியவற்றை தொடாமல் உணரக்கூடிய சென்சார் கருவியைக் கண்டுபிடித்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு,மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்நிலையில்,2021 உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ்,ஆர்டெம் படபூட்டியன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவத்திற்கான நோபல்பரிசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.