தளபதி 63 படத்தின் புதிய அப்டேட் வெளியானது !கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்தது.
தற்போது இவர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, ரசிகர்கள் அனைவரும் தளபதி 63 படத்தின் புதிய அப்டேட் பற்றி கேட்டனர்.
இந்நிலையில் இன்று தளபதி 63 படத்தின் முதல் லுக் 21 -ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்  அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.மேலும் இரண்டாவது லுக் 22 -ஆம் தேதி காலை 12  மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.