மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் சுற்றில் வெற்றியடைந்த தல அஜித்!

தல அஜித் நடிப்பதில் மட்டுமல்லாமல், கார், பைக் ஓட்டுவது, போட்டோகிராபி, ஐஐடி மாணவர்களுக்கு சிறிய ரக விமான (ட்ரான்) பயிற்சி அளிப்பது என மற்ற துறைகளிலும் சாதித்து வருகிறார்.

சமீபகாலமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் தல அஜித். இவர் நேற்று கோவையில் நடைபெற்ற 45வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டார். அதில் முதல் சுற்றில் தேர்வாகியுள்ளார். அடுத்த சுற்று அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.