#BREAKING: சற்று நேரத்தில் டெஸ்ட் போட்டி; ஓய்வை அறிவித்த கிறிஸ் மோரிஸ் ..!

தென்னாப்பிரிக்காவின் வலுவான ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அனைத்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு அறிவித்தார். 

தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அனைத்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு அறிவித்தார். கிறிஸ் மோரிஸ் தென்னாப்பிரிக்காவுக்காக அனைத்து வடிவ  போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதனுடன், ஐபிஎல் தொடரின் முக்கிய வீரராகவும் இருந்துள்ளார். 34 வயதான மோரிஸ் தனதுஓய்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மோரிஸ் தனது கடைசி சர்வதேச போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக ஜூலை 2019 இல் விளையாடினார். 2012-ல் சர்வதேச போட்டியில் அறிமுகமான மோரிஸ், தென்னாப்பிரிக்காவுக்காக 4 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 23 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட்டில் 12, ஒருநாள் போட்டியில் 48 மற்றும் சர்வதேச டி20 போட்டியில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும், மோரிஸ் மூன்று வடிவ போட்டிகளிலும் மொத்தம் 773 ரன்கள் எடுத்துள்ளார்.  ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கிய வீரர் என்றால் அது மோரிஸ் தான், ஐபிஎல் 2021 ஏலத்தில் 16.25 கோடிக்கு மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. இருப்பினும், ஐபிஎல் 2022 இன் மெகா ஏலத்திற்கு முன்பு ராஜஸ்தான் அணி அவரைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை.

ராஜஸ்தானைத் தவிர, மோரிஸ் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார். 81 ஐபிஎல் போட்டிகளில் 618 ரன்கள் குவித்ததோடு, 95 விக்கெட்டுகளையும் விழ்த்தியுள்ளார்.

இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் கடைசி டெஸ்ட் போட்டியில் சற்று நேரத்தில்  மோதவுள்ள நிலையில் கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் கிறிஸ் மோரிஸ் தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Chris Morris (@tipo_morris)

author avatar
murugan