உ.பி. ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து – 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள மின்னணு பொருட்கள் (எலக்ட்ரானிக்) உற்பத்தி செய்யும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ஏற்பட்ட தீயில் படுகாயமடைந்த மேலும் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

வெடி விபத்தை அடுத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரசாயன தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளதாக  கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாவட்ட ஐஜி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment