#BREAKING: கருமுட்டை விற்பனை – மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை!

சிறுமியின் கருமுட்டையை விற்பனை தொடர்பாக தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை.

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 2 மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்களிடம் ஏடிஎஸ்பி கனகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். இவர்களிடம் 16 வயது சிறுமியிடம் 4 ஆண்டுகளாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்தது குறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் சிறுமியின் தாயார் மற்றும் அவரது இரண்டாவது கணவர், இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட டைலர் மாலதி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்திருந்தது. மேலும், சிறுமியின் ஆதார அட்டையில் வயதை போலியாக மாற்றி கருமுட்டையை விற்பனை செய்வதற்கு உதவிய ஜான் என்ற இளைஞரையும் போலீசார் இன்று கைது செய்தனர். சிறுமியின் கருமுட்டை எந்த மருத்துவமனைக்கு விற்பனை செய்யப்பட்டது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சமயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுமியின் கருமுட்டை விற்பனை என்பது விஞ்ஞான ரீதியிலான மாபெரும் கொள்ளை. கருமுட்டை விற்பனை தொடர்பாக காவல்துறையிடம் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். இதுதொடர்பாக முழுமையாக உரிய விசாரணை நடத்திய பிறகு கருமுட்டை விற்பனையில் தொடர்பியிருந்தால் தனியார் மருத்துவமனையின் அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்படும் என கூறினார். இந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment