மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபருக்கான வருமான வரியில் ஏமாற்றம் !

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அறிக்கையில்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை என  அறிவித்துள்ளார்.

வருமான வரி குறித்து பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பல அறிவிப்புக்களை வெளியிட்டார். அதில். 8 கோடியே 20 லட்சம் பேர் நாடு முழுவதும் வருமான வரி செலுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். 85 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், வருமான வரி மூலம் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாகவும் கூறினார். வரி ஏய்ப்பு நாடு முழுவதும் கணிசமாக குறைந்துள்ளதாகவும், நேரடி வரி வருவாய் 12 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

விவசாய கூட்டுறவு சங்கங்களுக்கு 100 சதவீதம் வருமான வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மாத சம்பளதாரர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

மாத ஊதியதாரர்கள் 1 கோடியே 89 லட்சம் பேர் 2016-17 நிதி ஆண்டில் வருமான வரி செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தனிநபர் வருமானத்தில் 40 ஆயிரம் ரூபாய்க்கு நிலையான வரிக்கழிவு வழங்கும் முறை மீண்டும் அமல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கல்விக்கான செஸ் வரி 4 சதவீதமாக உயர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment