டாஸ்மாக் டெண்டர் ஒளிவுமறைவின்றி நடக்கிறது – அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் பார் டெண்டர் ஒளிவுமறைவின்றி விடப்பட்டது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. 

அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு வேண்டியவர்களுக்கு மதுபான பார் டெண்டர் விடுவதாகவும், எனவே இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிடக் கோரி பார் உரிமையாளர்கள் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் இதுகுறித்து, சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், போராட்டம் நடத்தியவர்கள் விதிமீறல் தொடர்பாக எந்த மனுவும் கொடுக்கவில்லை. தமிழகத்தில் டாஸ்மாக் பார் நடத்த வசதியுள்ள 1,550 கடைகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் ஆனால் கொரோனா காலம் என்பதால் கூடுதலாக இரண்டு விதிகள் என 68 விதிகள் அடிப்படையில் பார் டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் பார் டெண்டர் ஒளிவுமறைவின்றி விடப்பட்டது. பார் ஏலப்படிவம் ஆன்லைன் மூலமும், நேரிடையாகவும் யார் வேண்டுமானாலும் பெறமுடியும். வீட்டின் முன் ஆர்பாட்டம் நடத்தியவர்கள் இதுவரை என்னை ஒருமுறை கூட சந்திக்கவே இல்லை. போரட்டம் நடத்தியவர்களிடம் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக எழுதி தரக்கோரியிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.