, , ,

“மிதக்கும் சென்னை;திமுக அரசுதான் காரணம்” – இபிஎஸ் குற்றச்சாட்டு!

By

சென்னை:அதிமுக அரசு அமைந்த பிறகுதான் சென்னை மாநகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.அந்த வகையில்,சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக,பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் அவர்கள் 3-வது நாளாக ஆய்வு செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நேற்று சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் ஆய்வு செய்தார்.அதேபோல, இன்று யானைக்கவுனி பகுதியில் மழை பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி  ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில்,திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

“திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்னும் பல இடங்களில் அதிகாரிகள் நேரடியாக சென்று பார்கவில்லையென்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த திமுக அரசு விரைந்து செயல்பட்டு எங்கெல்லாம் தாழ்வான பகுதி உள்ளதோ அந்த பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை மின்மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறன்.

3 நாட்கள் ஆகியும் இன்னும் மழைநீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு கிடைக்காமல் உள்ளது.மின்சாரம்,மருத்துவ வசதி கிடைக்காமல் உள்ளது.குறிப்பாக குழந்தைகளுக்கு பால் கிடைக்காமல் உள்ளது.

ஆகவே,திமுக அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து செயல்பட்டு  மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர்,”அதிமுக அரசு அமைந்த பிறகுதான் சென்னை மாநகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.புரட்சி தலைவி அம்மா இருந்தபோதும்,மறைவுக்கு பின்னரும் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளதோ? அதைக் கண்டறிந்து,அந்த பகுதியில் வடிகால் செய்து கொடுத்த அரசு அம்மாவின் அரசு.

மேலும்,மழைநீர் வடிகால் வசதி செய்து கொடுப்பதற்காக உலக வங்கி,ஜெர்மன் வளர்ச்சி வங்கி,தமிழக அரசின் நிதி,மாநகராட்சி நிதி ஆகியவற்றைக் கொண்டு இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.குறிப்பாக, ரூ.1385 கோடி மதிப்பில் அடையாறு – கூவம் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வசதி 406 கி.மீ க்கு செய்து முடித்த அரசு அம்மாவின் அரசு.அதனால்தான்,கனமழை பெய்தும் கூட தற்போது அப்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் உள்ளது”,என்று தெரிவித்தார்.

Dinasuvadu Media @2023