தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை…! கனிமொழி எம்.பி. ட்வீட்…!

தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து, கனிமொழி எம்.பி. ட்வீட்.

இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை, உழவர்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்து, எதிர்க்கால நலனை உறுதி செய்யும் திட்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரத் திட்டத்தை உறுதி செய்தது, பனை மரங்களின் பாதுகாப்பு மற்றும் தொழில் வளர்ச்சி, திரு. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், நெல் ஜெயராமன் மரபுசார் விதை பாதுகாப்பு இயக்கம், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம், உழவர் சந்தைகளை நவீனப்படுத்தி மேம்படுத்துதல், சிறு தானியத் திட்டம் ஆகிய பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை சிறப்பாக இருந்தது.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.