முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்…!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.

தமிழக சட்டப்பேரவையில் சமூக நீதிக்கான தொடர்ச்சியான போராட்டத்தில் 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற 20% இட ஒதுக்கீடு போராட்டம் முக்கியமானது. இந்த போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் தியாகத்தை மதித்திட கூடிய வகையில், அவர்களுக்கு விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு விழுப்புரத்தில் 4 கோடி ரூபாயில் மணிமண்டபம், அவர்களின் வாரிசுகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.