பொங்கல் விழா அழைப்பிதழில் மட்டுந்தான் தமிழ்நாடு இல்லை – சு.வெங்கடேசன் எம்.பி

ஆளுநர் அனுப்பிய பொங்கல் விழா அழைப்பிதழில் மட்டுந்தான் தமிழ்நாடு இல்லை என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். 

காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு என்பதை, தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என தெரிவித்திருந்தது பேசும் பொருளானது.

இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அந்தக்காலத்தில் தமிழ்நாடு இல்லை” என்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.  அவர் அனுப்பிய பொங்கல் விழா அழைப்பிதழில் மட்டுந்தான் தமிழ்நாடு இல்லை. மற்ற படி தமிழ்நாடு என்றென்றும் இருக்கிறது.’ என பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment