தமிழகம் சர்ச்சைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முற்றுப்புள்ளி வைத்தது வரவேற்கத்தக்கது – செல்வ பெருந்தகை

தமிழகம் சர்ச்சைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முற்றுப்புள்ளி வைத்தது வரவேற்கத்தக்கது என செல்வா பெருந்தகை தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு என்பதை, தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என தெரிவித்திருந்தது பேசும் பொருளானது.

இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதுகுறித்து சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், தமிழகம் சர்ச்சைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முற்றுப்புள்ளி வைத்தது வரவேற்கத்தக்கது.

கிடப்பில் உள்ள ஆன்லைன் ரம்மி, நீட் போன்ற சட்டமசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநில அரசின் கொள்கைகள், செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடாமல் இருப்பது நல்லது; இதனால் ஆட்சியாளர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே பரஸ்பரம், நல்ல புரிந்துணர்வு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment