ம.நீ.ம தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை

By venu | Published: Jul 03, 2020 02:10 PM

மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  விசாரித்து வருகிறது . அதன்படி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் காவல்துறை மக்கள் மீது செய்யும் அத்துமீறல்களை விசாரிக்க நிலையான அமைப்பை வேண்டி மக்கள் நீதி மய்யம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் நிர்வாகி மவுரியா இந்த வழக்கை தொடர்ந்தார்.மேலும் மனுவில் ,போலீஸ் தாக்குதல், லாக்அப் மரணங்களை விசாரிக்க ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பதையும் குறிப்பிடப்பட்டிருந்தது. .இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ,தமிழகத்தில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்கப்படாதது பற்றி இரண்டு வாரங்களில்  பதில் அளிக்க  உத்தரவு பிறப்பித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc