தமிழ்நாட்டைவிட்டு வெளியேற மறுப்பு! ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை நிராகரிப்பு!

ராஜேந்திர பாலாஜி குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்.

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேஎம் ஜோசப் மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வில் நடைபெற்றது. அப்போது, ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2 முறை நடத்தப்பட்ட விசாரணையில் ராஜேந்திர பாலாஜி குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்றும் கூறியுள்ளனர். இதனால் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் நிபந்தனையில் தளர்வு தர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ராஜேந்திர பாலாஜியின் வழக்கில் இன்று முதல் 45 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment