தமிழக அரசு ஏவல் துறையாக காவல்துறையை பயன்படுத்துகிறது – பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கே.எஸ்.அழகிரி..!

முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார். யாரும் மறுக்க முடியாது. அரசாட்சியில் வெளிப்படை தன்மை இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது என கே.எஸ்.அழகிரி பேட்டி.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழக அரசு ஏவல் துறையாக காவல்துறையை பயன்படுத்துவதாகவும், டிஜிபி-க்கு என்ன கண்ட்ரோல் இருக்கிறது. எதற்காக டிஜிபி என்ற ஒரு பதவி தமிழகத்தில் இருக்க வேண்டும், எனக்கென்னமோ சட்டம் நிலைநாட்டக் கூடிய அதிகாரிகள் அவர்களது கடமையை நேர்மையாக, நாணயமாக செய்வதாக தெரியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்க்கு பதிலளிக்கும் வண்ணம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள், முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார். யாரும் மறுக்க முடியாது. அரசாட்சியில் வெளிப்படை தன்மை இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது. சொந்தக்கட்சிக்காரர்களே தவறு செய்தால் கண்டிக்கிறார்கள். எனவே இவகளெல்லாம் பாராட்ட வேண்டிய விஷயங்கள். தவறு நடந்தால் நாங்களே சொல்லுவோம். காவல்துறை நல்ல முறையில் தான் செயல்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.