ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிநியமன ஆணை வழங்கினார் தமிழக முதல்வர்!

ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணிநியமன ஆணை வழங்கினார் தமிழக முதல்வர்.

சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்த தந்தை ஜெய்ராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர்களது மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணிநியமன ஆணை வழங்கினார்.

அரசு பணிநியமன ஆணை பெற்ற பின் ஜெயராஜ் மகள் பெர்ஸிஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்று தர வேண்டும் என்றும், நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.