வரலாற்று பிழையை செய்துவிட்டார் தமிழிசை…! முதல்வர் நாராயணசாமி குற்றசாட்டு..!

ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது. இது பற்றி எனக்கு விளக்கம் தர ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கிரண்பேடி நீக்கத்தை தொடர்ந்து, புதிய ஆளுநராக தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பதவியேற்றார். இந்நிலையில் அவர் பதவியேற்ற நாள் அன்று, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அழைத்து, வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு இருப்பதாகவும், கடிதத்தில் நியமன உறுப்பினர்களை பாஜக என்று  குறிப்பிட்டுள்ளார் என்றும், நியமன உறுப்பினர்களை பாஜகவினர் என்று சபாநாயகர் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது. இது பற்றி எனக்கு விளக்கம் தர ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.