திரைத்துறை கொண்டாடும் ‘கலைஞர் நூற்றாண்டு விழா’ ட்ரெய்லர் வெளியீடு!

அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், தமிழ் திரைத்துறையினர் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் முறையில் இன்று மாலை 6 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது.

அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த விழாவில், மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மௌன அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற இருப்பதால், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சாதனை குறிப்புகளை விவரிக்கும் வகையில் ட்ரைலர் ஒன்றை கலைஞர் டிவி வெளியிட்டுள்ளது.

திரைத்துறை கொண்டாடும் ‘கலைஞர் நூற்றாண்டு விழா’ ட்ரெய்லர் வெளியீடு!

இன்று மாலை நடைபெறும் இந்த விழாவுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி 6மணி நேரம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.