தவறாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..? காசாவில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள்..!

Gaza attack

Gaza Attack : காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் வெளிநாட்டு தன்னார்வலர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல் என்பது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஹாமாஸ் அமைப்பை முழுதாக அழிக்கும் வரையில் தாக்குதலை நிறுத்த மாட்டோம் என கூறி காசா நகர் மீது தற்போது வரையில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம். இதுவரை காசா நகரில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. … Read more

கதிகலங்கும் காசா.! பல்வேறு விதமான வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பும் அமெரிக்கா.!

US helps to Israel

Isreal : இஸ்ரேல் ராணுவத்திற்கு அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பி உதவி செய்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஹாமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு தற்போது வரையில் இஸ்ரேல் ராணுவம், ஹாமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை காசா நகரில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் அதில் பெரும்பாலும் காஸாவில் வசிக்கும் பொதுமக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. போரை நிறுத்த சொல்லி பல்வேறு நாடுகள் … Read more

பெண்களின் உள்ளாடைகளுடன் விளையாடும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள்.! அதிர்ச்சியூட்டும் புகைப்படம்…

Israel Hamas Gaza City

Israel : இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேர் காசா நகரில் பெண்களின் உள்ளாடைகளுடன் விளையாடும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஹாமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இரு தரப்பு தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1200 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், காசா நகரில் சுமார் 20 … Read more

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார்… அமெரிக்கா தகவல்!

Marwan Issa

Hamas : இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான மர்வான் இசா கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்தாண்டு முதல் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையேயான போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் இருதரப்பிலும் பாதிப்பு இருந்தாலும், காசா பெரிய பாதிப்பை கண்டுள்ளது. Read More – திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து… பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக! அதுவும் சமீப காலமாக ஹமாஸ் படையினரை குறித்து வைத்து காசாவில் இஸ்ரேல் … Read more

இந்த இடத்தில் தாக்குதல் நடத்த வேண்டாம்… இஸ்ரேலை எச்சரிக்கும் அமெரிக்கா.!

Joe Biden - Gaza Rafeh

Israel Hamas War :  இஸ்ரேல் ஹமாஸ் போர் என்பது கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் தொடங்கி தற்போது வரை தாக்குதல்கள் தொடர்கின்றன. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். காசா நகரில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த தாக்குதல்கள் முன்பை விட குறைந்தாலும், முழுதாக தாக்குதல்கள் குறையவில்லை. பல்வேறு உலக நாடுகள் , காசா நகர் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு … Read more

அமெரிக்கா எச்சரித்த போதும் அடம்பிடிக்கும் இஸ்ரேல்…

Israel President Benjamin Netanyahu

Israel : கடந்த வருடம் அக்டோபர் மாதம் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது போர் தொடுத்து நூற்றுக்கணக்கானோரை பிணை கைதிகளாக கடத்தி சென்றது. இதில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். இதற்கு தற்போது வரையில் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ்  அமைப்பினர் அதிகமாக இருக்கும் காசா நகரில் போர் நடத்தி வருகிறது. இதில் இதுவரையில் சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. Read More – காசாவுக்கு நல்லது செய்ய … Read more

இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்… இந்திய தூதரகம்!

Embassy of India

Indian Embassy : இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்தாண்டு முதல் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே போர் நடைபெற்று வருகிறது. இருதரப்பும் எல்லை பகுதிகளில் ஏவுகணை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பாவி மக்கள் பலியாகியுள்ள நிலையில், பலர் வீடுகளை தங்களது உடமைகளை இழந்து தவிர்த்து வருகின்றனர். Read More – இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்… இந்தியர் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் … Read more

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்… இந்தியர் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் காயம்!

Indian national

Missile Attack : இஸ்ரேலில் நடந்த ஏவுகணை தாக்குதலில் இந்திய ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. Read More – உலகின் நம்பர் 1 … Read more

காசாவில் போர் நிறுத்தம் தேவை…அழைப்பு விடுத்த கமலா ஹாரிஸ்.!

kamala harris - gaza

Kamala Harris: அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், உடனடியாக காசாவின் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள செல்மாவில் நேற்று (மார்ச் 3ம் தேதி) நடைபெற்ற ஒரு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், காசா -இஸ்ரேல் போர் குறித்து பேசியுள்ளார். READ MORE – பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்கும் ஷெபாஸ் ஷெரீப் 5 மாதங்கள் கடந்தும் இஸ்ரேல் தொடர்ந்து காசாவை தாக்கி வருகிறத. போர் … Read more

காசா மக்களுக்கு விமானம் மூலம் நிவாரண உதவி.. அமெரிக்கா அறிவிப்பு..!

US military

Joe Biden: அமெரிக்கா விரைவில் விமானம் மூலம் காசாவிற்கு நிவாரண உதவிகளை வழங்கத் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். ஜோ பைடனின் இந்த அறிவிப்பு  நேற்று முன்தினம் உதவி பொருள்கள் வாங்கி கொண்டு இருந்த பாலஸ்தீனிய பொதுமக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்திய பிறகு வந்துள்ளது. READ MORE- மும்பை தாக்குதல்… முக்கிய குற்றவாளி அசாம் சீமா பாகிஸ்தானில் உயிரிழப்பு.! காசா பகுதியில் நிவாரணப் பொருட்களை வாங்கி கொண்டு … Read more