இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்… இந்திய தூதரகம்!

Indian Embassy : இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்தாண்டு முதல் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே போர் நடைபெற்று வருகிறது. இருதரப்பும் எல்லை பகுதிகளில் ஏவுகணை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பாவி மக்கள் பலியாகியுள்ள நிலையில், பலர் வீடுகளை தங்களது உடமைகளை இழந்து தவிர்த்து வருகின்றனர்.

Read More – இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்… இந்தியர் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் காயம்!

இந்த போரை நிறுத்துவதற்கு பல உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டும், பலன் அளிக்கவில்லை, இருதரப்பும் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தி தான் வருகின்றனர். இந்த சூழலில், இன்று அதிகாலை லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லையில் உள்ள விவசாய தோட்டத்தை தாக்கியது.

இந்த ஏவுகணை தாக்குதலில் கேரளாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் கூறியதாவது, ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தது, 2 காயமடைந்தது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது.

Read More – ஆப்கானிஸ்தானில் கனமழை, பனிப்பொழிவால் 39 பேர் பலி..! 14000 கால்நடைகள் உயிரிழந்த பரிதாபம்

உயிரிழந்தவரின் குடும்பத்துக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக கூறியிருந்தது. இந்த நிலையில், இஸ்ரேல் எல்லையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும், குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கில் உள்ள எல்லைப் பகுதிகளில் பணிபுரிபவர்கள் அல்லது வருகை தருபவர்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

Read More – உலகின் முதல் நாடு…கருக்கலைப்பை உரிமையாக்கிய பிரான்ஸ் நாடாளுமன்றம்.!

இதற்கான ஹெல்ப்லைன் எண்களையும் இந்திய தூதரகம் வெளியிட்டது. ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேலும், இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாக இஸ்ரேல் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment