ஆப்கானிஸ்தானில் கனமழை, பனிப்பொழிவால் 39 பேர் பலி..! 14000 கால்நடைகள் உயிரிழந்த பரிதாபம்

Afghanistan: ஆப்கானிஸ்தானில் பலத்த மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது, மேலும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பனிப்பொழிவு காரணமாக 14000 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சகத்தின் (Ministry of Disaster Management) செய்தித் தொடர்பாளர் ஜனன் சயீக், கடும் மழை காரணமாக 637 வீடுகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். இதனிடையில், நான்கு நாட்கள் பனிப்பொழிவு மற்றும் புயல்களுக்குப் பிறகு, திங்களன்று சலாங் நெடுஞ்சாலையில் பயணிகள் வாகனங்களை இயக்க மீண்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Read More – உலகின் முதல் நாடு…கருக்கலைப்பை உரிமையாக்கிய பிரான்ஸ் நாடாளுமன்றம்.!

சார்-இ-புல் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் கூறும் போது, “பனி தொடர்ந்து பெய்து வருவதால், பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை, பனிப்பொழிவு காரணமாக கால்நடைகள் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளன, அரசாங்கத்தின் அவசர உதவி அனைத்து தரப்பினருக்கும் அவசியமாக தேவைப்படுகிறது” என கூறியுள்ளார்.

Leave a Comment