தனது பதவியை ராஜினாமா செய்த அமெரிக்க ‘கேபிடல்’ காவல்துறை தலைவர்.!

அமெரிக்கா நாடாளுமன்ற கட்டிடத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து கேபிடல் காவல்துறை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, கேபிடல் காவல்துறை தலைவர் ஸ்டீவன் சுண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், வருகின்ற ஜனவரி 20-ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்கவுள்ளார். நேற்று பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்புக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் … Read more

அமெரிக்காவில் வன்முறை: அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய திட்டம்!

தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கும் அதிபர் ட்ரம்ப், தடுப்புகளை மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகுந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள். ரொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தை அத்துமீறி முற்றுகையிட்டதை அடுத்து, அதிபர் பதவில் இருந்து நீக்குவது குறித்து அந்நாட்டு அமைச்சரவையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கடமைகளை நிறைவேற்ற அதிபர் தவறினால் நீக்குவதற்கு அமெரிக்க அரசியல் சட்டத்தின் 25-வது திருத்தும் வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தலில் பெட்ரா ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு அதிகார … Read more

நாட்டுக்கே அவமானம்., இது நிச்சயம் வரலாற்றில் இருக்கும் – ஒபாமா கண்டனம்

நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு நடத்திய வன்முறை நாட்டுக்கே அவமானம் முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாமல் ட்ரம்பும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து பொய்யான குற்றசாட்டுகளை கூறி வருகின்றனர். அவர்கள் போராடுவது எதிர்பார்த்த ஒன்றுதான். நாடாளுமன்றத்தை முற்றிகையிட்டு நடத்திய வன்முறை நாட்டுக்கே அவமானம். இது நிச்சியம் வரலாற்றில் இருக்கும் என முன்னாள் அதிபர் ஒபாமா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையை வெளியிட்டு, தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளைமாளிகையில் தேர்தலில் வெற்றி … Read more

நான்கு பேர் உயிரிழப்பு., வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது – பிரதமர் மோடி

வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா வாஷிங்டனில் டி.சி.யில் நடைபெறும் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது. அமெரிக்க அதிபர் அதிகார மாற்றம் அமைதியாக நடைபெற வேண்டும். சட்ட விரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, அமெரிக்கா தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ … Read more

வெள்ளை மாளிகைக்குள் புகுந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் – அமெரிக்காவில் பதற்றம்!

ட்ரம்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் புகுந்ததால் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றிருந்தார். இந்த வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் நேற்று அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றபோது திடீரென கட்டிடத்திற்கு வெளியே ட்ரம்பின் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டனர். மறுபக்கம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் … Read more