“கடந்த 11 நாட்களில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பேருந்தில் பயணம்!”- போக்குவரத்துக் கழகம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து செப்டம்பர் 1 முதல் இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, தமிழகத்திற்குள் பயணிப்போருக்கு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, முதலில் மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி … Read more

இன்று முதல் தமிழகம் முழுவதும் ரயில் சேவைகளுக்கு அனுமதி!

5 மாதங்களுக்கு பின், தமிழகம் முழுவதும் இன்று முதல் ரயில்வே சேவைகள் தொடங்கியுள்ளது. ரயில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் செப்டம்பர் 7- ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு … Read more

இன்று முதல் மாநிலங்களுக்குள்ளான பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி.. ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் இன்று முதல் மாநிலங்களுக்குளான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க தொடங்கியது. தமிழகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, தமிழகத்திற்குள் பயணிப்போருக்கு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, முதலில் மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஐந்து மாதத்திற்கு பிறகு பேருந்து சேவைகள் தொடங்கியது. சென்னையில் பெரு … Read more

#Breaking: நாடு முழுவதும் மேலும் 80 சிறப்பு ரயிகள் இயக்கப்படும்!- ரயில்வே நிர்வாகம்

இந்தியாவில் கூடுதலாக மேலும் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், மத்திய அரசு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதில் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு அனுமதி வழங்கிய நிலையில், ஒருசில … Read more

செப். 7 முதல் டெல்லியில் மெட்ரோ சேவைகள்..டோக்கன்களுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகள்!

டெல்லியில் செப். 7 முதல் மெட்ரோ சேவைகள் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. … Read more

Unlock 4: தமிழகத்தில் தொழில் பயிற்சி நிறுவனங்கள் திறக்க அனுமதி!

தமிழகத்தில் தொழில் பயிற்சி நிறுவனங்கள் வரும் 21- ம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வரும் 21- ம் தேதி முதல் திறக்கப்படும் … Read more

இனி அரசு அலுவலகங்கள், வங்கிகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்.!

அரசு அலுவலகங்கள், வங்கிகள் 1 தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3 ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மாநில அளவிலான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழு … Read more

Unlock 4: மெட்ரோ ரயில்கள் செப். 7 முதல் இயங்கும்!- தமிழக அரசு

மெட்ரோ ரயில்கள் செப். 7 முதல் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில அளவிலான தளர்வுகளுடான ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- … Read more

தமிழகத்தில் ஷாப்பிங் மால்கள், ஷோரூம்கள் திறக்க அனுமதி.!

பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி. தமிழகத்தில் பல்வேறு தினங்களில் நடந்த ஆய்வு அடிப்படையிலும்,  மாவட்ட ஆட்சியருடன் நடத்தப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ குழுவினர் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன்  நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் தற்போது உள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது என … Read more