சிறுமி மீது காபியை கொட்டியதால் ரூ.7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க -நீதிமன்றம் உத்தரவு .!

விமானத்தில் உள்ள விமான பணியாளர் பெண் பயணம் செய்த  சிறுமி தொடையில் காபி கொட்டி உள்ளார். இந்த வழக்கில் நீதிபதி பயணிகளுக்கு சேவை செய்யும் போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பு விமான நிறுவனம் தான் என கூறினார். ஸ்பெயினின் மல்லோர்காவிலிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள வியன்னாவிற்கு  6 வயது சிறுமி தனது தந்தையுடன் சென்று உள்ளார். அப்போது விமானத்தில் அந்த சிறுமிக்கு காபி கொடுக்கப்பட்டது. விமானத்தில் உள்ள விமான பணியாளர் பெண்  சிறுமிக்கு காபி கொடுக்கப்போகும் … Read more

ஸ்பெயினில் சுற்றுலா பயணிகள் சென்ற படகில் திடீர் தீ விபத்து!

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஸ்பெயினில்  தீப்பிடித்து எரிந்தது. கடலோரப் பகுதியான கோஸ்டா அடிஜேவில் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற அந்தப் படகில் திடீரென புகை வந்ததைத் தொடர்ந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் படகு முழுவதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் 5 பயணிகளுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக கோஸ்டோ அடிஜே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.