புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு…!

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார். முதல்வர் ரங்கசாமியை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி என்.ரங்கசாமி அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். இதனையடுத்து, இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்  சிகிச்சை முடிந்து, வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். என்.ஆர் காங்கிரசை சேர்ந்த சட்டப்பேரவை … Read more

இன்று புதுச்சேரியில் எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு…!

இன்று புதுச்சேரியில் எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு. புதுச்சேரியில் கடந்த 7-ஆம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவர்கள்  முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின் அவரது வீட்டில் தன்னை தனிமைபடுத்திக் கொண்டார். இந்நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, 23 நாட்கள் கடந்துள்ள நிலையில் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொள்ளாமல் இருந்தனர். இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், … Read more

புதுச்சேரியில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி…!

புதுச்சேரியில் இன்று முதல் 18 வயதுக்கு கொரோனா தடுப்பூசி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், நேற்று புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்த இணையத்தில் முன்பதிவு செய்யும் பணிகளை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் … Read more

புதுச்சேரியில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்…!

புதுச்சேரியில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ். புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் மொத்தம் 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டது. அதுபோல, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 14 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், விசிக ஒரு இடத்திலும் போட்டியிட்டனர். மேலும், இதுதவிர 324 சுயேட்சை … Read more

#ElectionBreaking:புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் வெளியீடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது.இதில் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது.சற்று முன்னர் தான் 14 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது.இந்த பட்டியலில் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை எதிரணியாக என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது.இந்த கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் – 14,பா.ஜ.க-9 மற்றும் அ.தி.மு.க -5 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. தற்பொழுது பாஜக போட்டியிடுகின்ற … Read more

#Big Breaking:புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ்

புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும், தேர்வில் தேர்ச்சி பெறும் முறையை அறிவிப்பதற்கும் பள்ளி கல்வி இயக்குநரகம் சமர்ப்பித்த திட்டத்திற்கு புதுச்சேரியின்  துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் ,புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் “ஆல் பாஸ்” … Read more

#ELECTIONBREAKING: புதுச்சேரியில் 4-வது அணியா..? தேமுதிக தனித்து போட்டி..!

புதுச்சேரியில் தேமுதிக தனித்து போட்டியிடம் என மாநில செயலாளர் விவிபி வேலு தகவல் அளித்துள்ளார். ஏற்கனவே புதுச்சேரியில் திமுக -காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் -அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உள்ளது.இதற்கிடையில், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியோர் இணைந்து தேர்தலை சந்திக்கின்றனர். இதனால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணியில் இணையுமா..? அல்லது தனித்து போட்டியிடுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், தேமுதிக தனித்து … Read more

நிவர் புயல் எதிரொலி.. பேருந்து சேவை நிறுத்தம்..!

புதிதாக உருவாகியுள்ள “நிவர்” காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இன்று கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும், நாளை மாலை பாண்டிச்சேரி அருகே “நிவர்” புயல் கரையை கடக்கும்போது மிக கனமழையுடன் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளும் இன்று மதியம் ஒரு மணி முதல் பேருந்து … Read more

#BREAKING புதுச்சேரியில் நிவர் புயலால் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு.!

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வியாழக்கிழமை வரை 3 நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல், 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்நிலையில், 26-ந்தேதி காலை 6 மணி வரை இத்தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பால், … Read more

புதுச்சேரியில் திறக்கப்பட்ட பள்ளிகள்! மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மெது மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிற நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. மாணவர்கள், பெற்றோரின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் வகுப்புகளுக்கு மாணவர் வருகை … Read more