வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நடந்த மேலும் ஒரு சோகம்! கேப்டன் நிக்கோலஸ் பூரன் பதவி விலகல்.!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கேப்டன் பதவியிலிருந்து நிக்கோலஸ் பூரன் விலகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கேப்டன் பதவியிலிருந்து நிக்கோலஸ் பூரன் விலகுவதாக அறிவித்துள்ளார். இருமுறை டி-20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நடந்து முடிந்த டி-20 உலககோப்பைக்கு நிக்கோலஸ் பூரன் தலைமை வகித்தார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. … Read more