மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் 137 நாட்களுக்கு நீர் திறக்க முதல்வர் அதிரடி உத்தரவு!

காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி, மெட்டோர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. தற்போது, நாளை முதல் 137 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து இரண்டு மதகுகள் வழியாக புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு பகுதி பாசனத்திற்க்காக நீர் திறக்கப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு பகுதி விவசாய … Read more

வெள்ள அபாய முன்னெச்சரிக்கை! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு!

கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து  ஓடுகிறது. இதன் காரணாமாக, மேட்டூர்  அணை நிரம்பி தமிழ்நாட்டிற்கு தற்போது வினாடிக்கு 3 ஆயிரம்  கனஅடி தண்ணீர் வீதம் திறந்துவிடப்படுகிறது. இது போகப்போக 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடபடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனால் காவிரி பாயும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, அந்தந்த மாவட்டதில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.