விடுதி உணவில் பல்லி! 30 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு

30க்கும் மேற்பட்ட தெலுங்கானா மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர், உணவில் பல்லி இறந்ததுக் கிடந்ததாகக் குற்றம் சாட்டபட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் அரசு நடத்தும் பெண்கள் விடுதி ஒன்றில் இரவு உணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உணவில் இறந்த பல்லியைப் பார்த்ததாக மாணவி ஒருவர் கூறியதாகவும், ஆனால் அது பச்சை மிளகாய் என்று கேட்டரிங் ஊழியர்கள் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மாணவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் … Read more

பெண்ணின் உள்ளாடைக்குள் மறைந்திருந்து இங்கிலாந்து வரை பயணம் செய்த சிறிய பல்லி…!

சிறிய பல்லி ஒன்று ஒரு பெண்ணின் பெட்டிக்குள் இருந்த உள்ளாடைக்குள் மறைந்து இருந்தவாறே 4000 கி.மீ பயணம் செய்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த 47 வயதுடைய லிசா ரஸ்ஸல் எனும் பெண் ஒருவர் பார்படோஸ் எனும் தீவு நாட்டில் இருந்து, தனது சொந்த வீடு உள்ள இங்கிலாந்திற்கு வந்துள்ளார். கிட்டத்தட்ட நான்காயிரம் மைல் தூரம் கடந்து வந்த லிசா வீட்டிற்கு வந்து தனது பெட்டியை திறந்து பார்க்கும் பொழுது தனது உள்ளாடைக்குள் சிறிய பல்லி ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளார். … Read more

டெல்லியிலுள்ள பிரபல ஹோட்டல் சாம்பாரில் பல்லி – போலீசார் வழக்குப்பதிவு!

டெல்லியில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் சாம்பாரில் பல்லி கிடந்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் டெல்லியில் உள்ள கொனாட் பிளேஸில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் வாடிக்கையாளர்கள் தென்னிந்திய உணவு வகைகளை அதிகமாக ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் அதுபோல ஒரு வாடிக்கையாளர் சாம்பார் உணவுக்காக வாங்கி உண்ட போது அதிலிருந்த பல்லியின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு … Read more