லெபனான் வெடிவிபத்து.. பதவியை ராஜினாமா செய்த பிரதமர் ..!

லெபனான் பிரதமர் ஹசன் டயப் தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் ஜனாதிபதி மைக்கேல் அவுனிடம் கொடுத்தார். லெபனான் நாட்டில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி பெய்ரூட் துறைமுகம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் என்னும் வேதிப்பொருளால் நிகழ்ந்த பயங்கரமான குண்டுவெடிப்பில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலரை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், … Read more

பெய்ரூட் குண்டுவெடிப்பு.. ஏற்பட்ட சேதத்தை செயற்கைக்கோள் மூலம் வெளியிட்ட நாசா..!

லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 100 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 4,000- க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக லெபனான் பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விபத்து இதனால் நடந்தது என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இந்த விபத்தால் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேதத்தை ஏற்படுத்தியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாசாவின் இமேஜிங் மற்றும் பகுப்பாய்வு குழு … Read more

லெபனான் விபத்து.. பெய்ரூட்டில் 2 வாரம் அவசர நிலை பிரகடனம்.!

பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2750 டன் எடை கொண்ட  அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. விபத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் நிச்சயம் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். லெபனான் வெடி விபத்தை தொடர்ந்து அடுத்த 2 வாரம் … Read more

லெபனான் விபத்து.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.!

நேற்று லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இன்று காலை வரை 70 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது, 100 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 4,000- க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விபத்து இதனால் நடந்தது என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக … Read more

Lebanon விபத்து: 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு குறித்து பிரதமர் மோடி அதிர்ச்சி.!

லெபனானின் பெய்ரூட்டில் 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வெடிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்து, பெய்ரூட் நகரையே உலுக்கியது. இந்த விபத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் 4,000 பேர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. “பெய்ரூட் நகரில் ஏற்பட்ட பெரிய வெடிப்பால் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுடனும் உள்ளன ”என்று பிரதமர் அலுவலகம்  … Read more

லெபனான் விபத்து..! இது ஒரு பயங்கரமான தாக்குதல்- ட்ரம்ப் சந்தேகம்.!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்து, பெய்ரூட் நகரையே உலுக்கியது. இந்த விபத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் 3,700 பேர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பெய்ரூட்டை உலுக்கிய சக்திவாய்ந்த வெடிவிபத்து “ஒருவித குண்டு” காரணமாக ஏற்பட்டதாகத் தெரிகிறது என்று அமெரிக்க தளபதிகள் … Read more