#JustNow: அரசு நிகழ்வுகள்.. இதற்கான தடை நீக்கம், ஆனா இது தொடரும் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

கொரோனா காலத்தில் அரசு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு. கொரோனா கால செலவுகளை முன்னிட்டு அரசு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு நிகழ்வுகளில், அரசு அதிகாரிகளுக்கான மத்திய உணவு, இரவு உணவு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான செலவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. புதிய வாகனங்களை வாங்குவதற்கான தடை நீடித்தாலும், பழைய பழுதடைந்த வாகனங்களை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை பயிற்சி, கொரோனா தொடர்பான … Read more

புதன் கிழமைகளில் பொதுப் போக்குவரத்து – மதுரை ஆட்சியர்

மதுரையில் அனைத்து அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வாகன மாசை குறைக்கும் வகையில் அரசு அதிகாரிகள் மின்சார வாகனங்களிலோ, சைக்கிளிலோ, நடந்தோ வருமாறு அறிவுறுத்தியுள்ளார். புதன்கிழமைகளில் அரசு அலுவலர்கள் சொந்த வாகனத்தில் வருவதை தவிர்த்துவிட்டு, பொது பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அரசு அலுவலகங்களுக்கு வரும் பார்வையாளர்களையும் பொது போக்குவரத்தை பயன்படுத்த கோருமாறும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.