#BREAKING: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் அறிவிப்பு

தமிழக அரசு பேருந்து கட்டணம் உயர்வு குறித்து உலா வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் அறிவிப்பு. தமிழக அரசின் போக்குவரத்துக்கு கழகம் பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து … Read more

#BREAKING: பாதுகாப்பு வசதியுடன் பேருந்து சேவை – தொடக்கி வைத்தார் முதலமைச்சர்!

நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பட்டன் வசதி கூடிய 500 பேருந்துகளின் சேவை தொடக்கம். நிர்பயா பாதுகாப்பு நகர திட்டத்தின் கீழ் மாநகர போக்குக்குவரது கழகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில்,  நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதியுடன் கூடிய 500 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி … Read more

புதன் கிழமைகளில் பொதுப் போக்குவரத்து – மதுரை ஆட்சியர்

மதுரையில் அனைத்து அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வாகன மாசை குறைக்கும் வகையில் அரசு அதிகாரிகள் மின்சார வாகனங்களிலோ, சைக்கிளிலோ, நடந்தோ வருமாறு அறிவுறுத்தியுள்ளார். புதன்கிழமைகளில் அரசு அலுவலர்கள் சொந்த வாகனத்தில் வருவதை தவிர்த்துவிட்டு, பொது பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அரசு அலுவலகங்களுக்கு வரும் பார்வையாளர்களையும் பொது போக்குவரத்தை பயன்படுத்த கோருமாறும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் பொது போக்குவரத்து நிறுத்தம், மளிகை கடைக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், மளிகை கடைகளுக்கும் மூன்று மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக பரவி வருகிறது. எனவே கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக மே 7ஆம் தேதி முதல் மே 17-ஆம் தேதி வரையிலும் இமாச்சல் பிரதேசத்தில் முழு … Read more