டெல்லி விவகாரம் : குடியரசுத்தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு

டெல்லியில் அமைதியை ஏற்படுத்த குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கொடுக்கப்பட்ட மனுவில்,வன்முறையை தூண்டியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்றும் டெல்லி விவகாரத்தில் குடியரசுத்தலைவர் நேரடியாக தலையிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் வன்முறை பாதித்த பகுதியில் துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு ..!

டெல்லி வன்முறையால்  இதுவரை42 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்து வருகிறார். டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மாவுஜ்பூர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார் துணைநிலை ஆளுநர்.   நேற்று வட கிழக்கு டெல்லி பகுதியில் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் … Read more

டெல்லி வன்முறை : தேசிய மகளிர் ஆணைய குழு ஆய்வு  

டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு சொந்தமான ஆலையில் தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். டெல்லி வன்முறை தொடர்பாக தாஹிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்நிலையில் வன்முறை பாதித்த ஜாஃப்ராபாத் பகுதியில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.   

ஆம் ஆத்மி கவுன்சிலருக்கு சொந்தமான ஆலையில் சோதனை.!

டெல்லி வன்முறை தொடர்பாக தாஹிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு சொந்தமான ஆலையில் தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை. டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு சொந்தமான ஆலையில் தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். டெல்லி வன்முறை தொடர்பாக தாஹிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை … Read more

டெல்லி வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்வு

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

டெல்லி வன்முறை : அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்- கே.எஸ்.அழகிரி

டெல்லியில் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று  அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டு கலவர களமாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் அப்பகுதியில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் வன்முறையில் வீடுகள் மற்றும் பொது சொத்துக்கள் போன்றவை சேதமடைந்தன.இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் … Read more

10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு

கடந்த 4 நாட்களாக வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டு கலவர களமாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் அப்பகுதியில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் வன்முறையில் வீடுகள் மற்றும் பொது சொத்துக்கள் போன்றவை சேதமடைந்தன. இதனால் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் இந்நிலையில் டெல்லி வன்முறை எதிரொலியாக  பிப்ரவரி 28  மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த 10 மற்றும் 12 வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி வன்முறை : போலீஸ் கமிஷ்னர் ஆய்வு

டெல்லியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் விளைவாக அங்கு 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் வன்முறை நடைபெற்ற இடங்களில் போலீஸ் கமிஷ்னர் ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தார்.

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக உயர்வு

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வன்முறையில் காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   

டெல்லி வன்முறை: வேடிக்கை பார்த்த மத்திய ,மாநில அரசுகள் -சோனியா காந்தி

இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் குடியரசுத்தலைவருடன் சந்தித்தனர்.இதன் பின்னர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி,4 நாட்களாக தலைநகரில் வன்முறைகள் தலைவிரித்து ஆடியது .மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன என்று   தெரிவித்துள்ளார்.