டெல்லியில் வன்முறை பாதித்த பகுதியில் துணைநிலை ஆளுநர் நேரில் ஆய்வு ..!

  • டெல்லி வன்முறையால்  இதுவரை42 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மாவுஜ்பூர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார் துணைநிலை ஆளுநர்.  

நேற்று வட கிழக்கு டெல்லி பகுதியில் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரடியாக சென்றார். அங்கு இஸ்லாமிய மக்களுடன் பேசினார்.அப்போது  உங்களுடன் அரசு இருக்கிறது, எதற்கும் யாரும் பயப்படா வேண்டும்  என அவர்களுக்கு தைரியம் கூறினார்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறை 106 பேரை கைது செய்து, 18 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.