கோவை : இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கிய ஆட்சியர் ராஜாமணி !

கொரோனா வைரஸ் காரணமாக இந்திய முழுவதும் மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்களின் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் வாங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இறைச்சி கடைகளை மீண்டும் செயல்பட அனுமதி அளித்துள்ளார். தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ராஜாமணி எச்சரிக்கை அளித்துள்ளார்.

கோவையில் 5 ரூபாய் போதை பொருள் விற்பனை கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு!

கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க வலி நிவாரண மருந்து கொடுக்கப்படுகிறது. 5 மில்லி அளவு கொண்ட மிகச்சிறிய பாட்டிலில் இருக்கும் இந்த மருந்தின் விலை ரூ.5 மட்டும்தான். குறைந்த விலையில் அதிகபோதை கிடைப்பதால் இதை வாங்க போதைப்பிரியர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சில நாட்களுக்கு முன்பு இந்த மருந்தை திருடும்போது, கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 24) … Read more

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பான விசாரணை 7 மாதங்கள் நீடிப்பு..!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அவற்றின் பாதிப்புகள் பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார். அதன்படி கோவையில் 5-ம் கட்ட விசாரணை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று தொடங்கியது. முன்னதாக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கூறியதாவது:- கோவையில் 5-ம் கட்ட விசாரணை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. அந்த விசாரணை நாளையுடன்(வெள்ளிக்கிழமை)முடிவடைகிறது. கோவையை பொறுத்தவரை 50 பேர் பிரமாண வாக்குமூலம் … Read more

குளிக்க சென்றபோது அணையில் மூழ்கி கோவையை சேர்ந்த 2 சிறுவர்கள் பலி!

கோவைப்புதூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த பானு என்பவரது மகன் அப்துல்லா (வயது 17), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் சூர்யன் (17). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் தமிழக-கேரள எல்லையான வாளையாருக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள அணையில் 2 பேரும் குளித்தனர். எதிர்பாராதவிதமாக அவர் கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில், நீரில் … Read more

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பிளஸ்-2 மாணவரின் உடல் உறுப்புகள் தானம், 8 பேருக்கு மறுவாழ்வு!

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகன் சக்திவேல்(வயது 16). பிளஸ்-2 மாணவர். இவர் கடந்த 19-ந் தேதி இரவு 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். வனவாசி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சக்திவேல் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் … Read more

பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக பேச்சு, குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர் கைது..!

சேலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 3 கார்களை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து ரூ.2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் அந்த கார்களை மீட்க மேட்டுப்பாளையத்துக்கு சென்றார். அப்போது அந்த நபர், கோவை குனியமுத்தூர் சாரமேட்டை சேர்ந்த பழைய கார்களை விற்பனை செய்யும் வியாபாரியான ரபீக் (வயது 50) என்பவரிடம் உங்கள் கார்கள் உள்ளன. நீங்கள் ரூ.4 லட்சம் … Read more