ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க தற்காலிக விலக்கு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

பெருநகர சென்னை மாநகராட்சி ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 2021ம் ஆண்டிற்கான உயிர்வாழ் சான்று அளிப்பதிலிருந்து தற்காலிகமாக விலக்கு. உயிர்வாழ் சான்று அளிக்க ஓய்வூதியர்கள் அலுவலகம் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து பென்ஷன் வாங்கக் கூடிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் வழக்கமாக உயிர்வாழ் சான்றிதழ் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பார்கள்.    ஆனால், கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை காரணமாக  ஓய்வூதியதாரர்களின் உடல்நலம் … Read more

ரிப்பன் மாளிகையில் ‘தமிழ் வளர்க’ பெயர் பலகை இன்று நிறுவப்பட்டது..!

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மேல்தளத்தில் தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கட்டடத்தில் இருந்த “தமிழ் வாழ்க” என்ற பெயர்ப்பலகை நீக்கப்பட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சர்ச்சை எழுந்தது. ரிப்பன் மாளிகை மறுசீரமைப்பு பணிகளின் போது அந்த பெயர் பலகை பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருந்ததால் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரிப்பன் மாளிகை மறு சீரமைப்பு பணி இறுதி கட்டத்தில் உள்ளதால் “தமிழ் … Read more

ரிப்பன் மாளிகையில் மீண்டும் தமிழ்வாழ்க பெயர்ப்பலகை ..!

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மேல்தளத்தில் தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கட்டடத்தில் இருந்த “தமிழ் வாழ்க” என்ற பெயர்ப்பலகை நீக்கப்பட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சர்ச்சை எழுந்தது.  ரிப்பன் மாளிகை மறுசீரமைப்பு பணிகளின் போது அந்த பெயர் பலகை பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருந்ததால் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரிப்பன் மாளிகை மறு சீரமைப்பு பணி இறுதி கட்டத்தில் உள்ளதால்  “தமிழ் … Read more

காய்கனிகள் விற்பனை செய்பவர்களின் விபரங்களை அறிய ஓர் புதிய ஏற்பாடு-சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 3 சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்பவர்களின் விபரங்களை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில், ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில்,அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது,நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் கிராம பகுதிகளுக்கும் சம … Read more

எம்.பி, எம்.எல்.ஏ.க்களுடன் மாலை அமைச்சர்கள் ஆலோசனை..!

சென்னையில் உள்ள அனைத்து எம்பி, எம்எல்ஏக்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். சென்னையில் கொரானோ பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து எம்பி, எம்எல்ஏக்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆலோசனையில் ஈடுப்படள்ளனர். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் பேருந்து சேவை – சென்னை மாநகராட்சி..!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்ட பேருந்து சேவை திட்டத்தை நேற்று சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருவதால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகையும் அதிகரித்து காணப்படுகிறது.இதனால் டெல்லி, உத்திரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப்போன்று,தமிழகத்திலும் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.இதனால்,ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில்,ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பானது (ஜிட்டோ) சென்னை மாநகராட்சியுடன் … Read more

#JobAlert : சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

சென்னை மாநகராட்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபட வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று மட்டும் சென்னையில் அதிகபட்சமாக 4,640 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள மருத்துவ அலுவலர்கள் ஓராண்டு காலத்திற்கு … Read more

கொரோனா மையம் தொடங்க அனுமதிபெற தேவையில்லை- சென்னை மாநகராட்சி அறிவிப்பு ..!

சென்னையில் தனியார் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா மையங்களை தொடங்க முன் அனுமதி பெற தேவையில்லை.  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15,830 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,640 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் தனியார் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை பராமரிப்பு கொரோனா மையங்களை தொடங்க முன் அனுமதி பெற தேவையில்லை என்றும் தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது என்றும் … Read more

கொரனோ நோயாளி மற்றும் குடும்பத்தினரும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் குடும்பத்தினரும் வீட்டில் தனிமையில் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுரை. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 15,659 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கொரனோ நோயாளியின் குடும்பத்தினரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். விதிகளை மீறினால் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் கொரோனா  மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார். வெளியில் சுற்றும் … Read more

சென்னையில் 12,000 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள்..!

சென்னையில் 12,000 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி தகவல். சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரனோ சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து சென்னையில் 14 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்திப்பட்டு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 4,500 படுக்கை வசதிகளுடன்  கொரோனா சிகிச்சை மையமும், அண்ணா … Read more