எகிப்தில் சுமார் 2600 ஆண்டுகள் பழமையான “சீஸ்” கண்டுபிடிப்பு!

தொல்பொருள் ஆராச்சியாளர்கள் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் மற்றும் அவர்களின் நாகரிகங்கள் பற்றி கண்டுபிடித்து வரும் நிலையில் தற்போது 2600 ஆண்டுகள் பழமையான பாலிலிருந்து தயாரிக்கக் கூடிய “சீஸ்”-ஐ கண்டுபிடித்துள்ளனர். எகிப்தில் நடைபெற்று வரும் தொல்பொருள் ஆராய்ச்சியில், சுமார் கிமு 688 மற்றும் 525 இடைப்பட்டதாக காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட “சீஸ்” எனப்படும் பாலாடைக்கட்டியை கண்டுபிடித்துள்ளனர். இந்த சீஸ் ஆனது செம்மறி ஆட்டு பாலிலிருந்து உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்குள் ஏற்பட்ட துர்நாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற பெண்!

சீஸ் கடையிலிருந்து வந்த துர்நாற்றத்தால் பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு. தொல்லை தாங்காமல் கடையையே காலி செய்ய முடிவெடுத்த கடைக்காரர்.  தெற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு சீஸ் கடைக்கு மேல் உள்ள மாடி வீட்டில் குடியிருக்கும் பெண் தான் மனுவலா. இவர் இந்த சீஸ் கடைக்கு மேல்  இருப்பதால், தனது வீட்டிற்குள் கெட்ட வாடையாக வருகிறது  கூறியுள்ளார். ஆனால், அந்த சீஸ் கடை உரிமையாளர் அந்த வடை தனது கடையிலிருந்து வரவில்லை எனவும், அது பக்கத்து தெருவிலிருந்து வருகிறது எனவும் … Read more