எகிப்தில் சுமார் 2600 ஆண்டுகள் பழமையான “சீஸ்” கண்டுபிடிப்பு!

தொல்பொருள் ஆராச்சியாளர்கள் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் மற்றும் அவர்களின் நாகரிகங்கள் பற்றி கண்டுபிடித்து வரும் நிலையில் தற்போது 2600 ஆண்டுகள் பழமையான பாலிலிருந்து தயாரிக்கக் கூடிய “சீஸ்”-ஐ கண்டுபிடித்துள்ளனர். எகிப்தில் நடைபெற்று வரும் தொல்பொருள் ஆராய்ச்சியில், சுமார் கிமு 688 மற்றும் 525 இடைப்பட்டதாக காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட “சீஸ்” எனப்படும் பாலாடைக்கட்டியை கண்டுபிடித்துள்ளனர். இந்த சீஸ் ஆனது செம்மறி ஆட்டு பாலிலிருந்து உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.