பிரிட்டிஷ் இராணுவ வீரர் வில்லியம் பெண்டிங் பிரபு பிறந்த தினம் இன்று…!

பிரிட்டிஷ் இராணுவ வீரர் வில்லியம் பெண்டிங் பிரபு பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.  1874 ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர் தான் ராணுவ வீரர் வில்லியம் பெண்  டிங் பிரபு. இவர் ஒரு போர் வீரராக தனது வாழ்க்கையை தொடங்கி, அதன் பின்பு தனது 22வது வயதில் நாடாளுமன்றத்தின் உறுப்பினராகினார். அதன் பின்பு 1803ஆம் ஆண்டு சென்னையின் ஆளுநராக நியமிக்கப்பட்ட இவர், சர் தாமஸ் மன்றோ கொண்டு வந்த பல்வேறு வருவாய் … Read more

பன்மொழி அறிஞர் சையது முஜ்தபா அலியின் பிறந்த தினம் இன்று…!

வங்காள எழுத்தாளரும், பன்மொழி அறிஞருமாகிய சையது முஜ்தபா அலியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1904 ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி வங்காள மாகாணத்தின் கரீம்கஞ்ச் நகரில் பிறந்தவர் தான் சையது முஜ்தபா அலி. இந்த கரீம்கஞ்ச் நகர் தான் தற்போது அசாம் என அழைக்கப்படுகிறது. இவர் சிறந்த எழுத்தாளரும், பன்மொழி அறிஞருமாக திகழ்ந்துள்ளார். வங்காள மொழியை தாய்மொழியாகக் கொண்ட இவர் இந்தி, அரபி, பாரசீகம், உருது, பிரஞ்சு, மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட … Read more

செயற்கை கதிரியக்கத்தை உருவாக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி பிறந்த தினம் இன்று…!

செயற்கை கதிரியக்கத்தை உருவாக்கிய பிரெஞ்சு அறிவியலாளர் ஐரீன் ஜோலியட் கியூரி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1897 ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பாரிஸில் பிறந்தவர் தான் ஐரீன் ஜோலியட் கியூரி. இவர் புதிய தனிமங்களை வைத்து செயற்கைக் கதிரியக்கத்தை உருவாக்கிய பிரஞ்சு அறிவியலாளர். புகழ் பெற்ற நோபல் தம்பதிகளான மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் மகள் தான் ஐரீன் ஜோலியட் கியூரி. இவரது கணவர் பிரடெரிக் ஜோலியட் கியூரி. இவர் தனது கணவருடன் … Read more

சுதந்திரப் போராட்ட வீரர் வினோபா பாவே பிறந்த தினம் இன்று…!

சுதந்திரப் போராட்ட வீரர் வினோபா பாவே பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கைக்கோடா எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் வினோபாபாவே. இவர் சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத்தின் தந்தையும் ஆவார். இவர் மகாராஷ்டிரா தர்மா எனும் மாத இதழை 1903 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார். கதராடை, கிராமத்தில் தீண்டாமை, கிராம மக்களின் கல்வி, சுதந்திரம், மேம்பாடு ஆகியவற்றிற்கு பாடுபட்டவர். பூதான் எனும் … Read more

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் இன்று..!

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.  1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை அடுத்த புத்த மங்கலத்தில் பிறந்தவர்தான் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. இவர் புகழ்பெற்ற எழுத்தாளரும், சரித்திரக் கதைகளின் முன்னோடியுமாக திகழ்ந்துள்ளார். இவர் எழுதிய புத்தகங்களை படித்த காங்கிரஸ் தலைவர் டி எஸ் எஸ் ராஜன் அவர்கள் இவர் எழுத்துலகில் சாதிக்க வேண்டியவர் என வாழ்த்தி கூறியுள்ளார். இவர் 35 சிறுகதை தொகுதிகள், புதினங்கள், … Read more

சமஸ்கிருத அறிஞரும், தத்துவ ஞானியுமான பண்டிட் கோபிநாத் கவிராஜின் பிறந்த தினம் இன்று…!

சமஸ்கிருத அறிஞரும், தத்துவ ஞானியுமான பண்டிட் கோபிநாத் கவிராஜின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்கா அருகே உள்ள தாம்ரே கிராமத்தில் பிறந்தவர் தான் பண்டிட் கோபிநாத் கவிராஜ், இவர் சிறந்த சமஸ்கிருத அறிஞரும், தத்துவஞானியுமாக விளக்கியுள்ளார். இவர், விஷீத்த வாணி, அகண்ட மஹாயோக், பாரதிய சன்ஸ்க்ருதி கீசாதனா, தாந்த்ரிக் சாஹித்ய ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார். 1934 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு … Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 150- வது பிறந்த தினம் இன்று..!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 150 ஆவது பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரத்தில் பிறந்தவர் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை. இவரது முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. இவர் தனது 6 வயதிலேயே வீரப் பெருமாள் அண்ணாவி என்பவரிடம் தமிழ் கற்றுக் கொண்டுள்ளார். மேலும் கிருஷ்ணன் என்பவரிடம் ஆங்கிலம் பயின்றுள்ளார். அதன் பின்பு தூத்துக்குடி புனித சேவியர் பள்ளியிலும், கால்டுவெல் பள்ளியிலும் கல்வி … Read more

இளம் வயதில் புக்கர் விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் பிறந்த தினம்…!

இளம் வயதில் புக்கர் விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி புதுடெல்லியில் பிறந்தவர் தான் இந்தியப் பெண் எழுத்தாளர் கிரண் தேசாய். இவர் மிக இளம் வயதிலேயே புக்கர் விருது பெற்ற பெண் எழுத்தாளர் ஆவார். 1997 ஆம் ஆண்டு இவர் தனது முதன் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதன் பின்பு தனது வாழ்க்கை அனுபவங்களை வைத்து, 1998-ல் … Read more

கர்நாடக இசை கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த தினம் இன்று…!

கர்நாடக இசை கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  1896 ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியில் செம்பை எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் செம்பை வைத்தியநாத பாகவதர். இவர் கர்நாடக இசை உலகில் 70 ஆண்டுகள் புகழ் பெற்றவராக திறந்துள்ளார். தஞ்சை இசை விழா, கரூர் சங்கீத திருவிழா என பல இடங்களில் இவருக்கு கச்சேரி நடத்தக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இவர் … Read more

புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய மரியா மாண்ட்டிசோரி பிறந்த தினம் இன்று…!

புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய இத்தாலியை சேர்ந்த மரியா மாண்ட்டிசோரி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1870 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி இத்தாலியில் பிறந்த மருத்துவரும் கல்வியாளருமாகியவர் தான் மரியா மாண்டிசோரி. இவர் புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தியவர். நோட்டு புத்தகங்களுக்கு பதிலாக பொம்மை, வண்ண அட்டை, ஒலி எழுப்பும் கருவிகள், ஓவியம், வண்ணத்தாள் ஆகியவற்றின் மூலமாக கல்வி முறையை மாற்றியவர். குழந்தைகளுக்கு பாடங்களை எளிதாக கற்றுக் கொடுக்க வேண்டும் எனும் இவரது கொள்கை … Read more