செயற்கை கதிரியக்கத்தை உருவாக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி பிறந்த தினம் இன்று…!

செயற்கை கதிரியக்கத்தை உருவாக்கிய பிரெஞ்சு அறிவியலாளர் ஐரீன் ஜோலியட் கியூரி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1897 ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பாரிஸில் பிறந்தவர் தான் ஐரீன் ஜோலியட் கியூரி. இவர் புதிய தனிமங்களை வைத்து செயற்கைக் கதிரியக்கத்தை உருவாக்கிய பிரஞ்சு அறிவியலாளர். புகழ் பெற்ற நோபல் தம்பதிகளான மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் மகள் தான் ஐரீன் ஜோலியட் கியூரி. இவரது கணவர் பிரடெரிக் ஜோலியட் கியூரி.

இவர் தனது கணவருடன் இணைந்து செயற்கை கதிரியக்க தனிமங்களை உருவாக்கியுள்ளார். அதன் பின் இவருக்கு 1935 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசும் கிடைத்துள்ளது. மேலும் ஒரே குடும்பத்தில் உள்ள பலர் நோபல் பரிசுகளை பெற்றுள்ளதால் இன்று வரை இவர்களது குடும்பத்திற்கு இந்தப் பெருமையும் உள்ளது. ஐரின் ஜோலியட் கியூரி 1956 ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி பாரிஸில் மறைந்தார்.

author avatar
Rebekal