பக்ரீத் படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

இயக்குனர் ஜெகதீசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பக்ரீத். இப்படத்தில், விக்ராந்த், வசுந்தரா உட்பட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பின்னணி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமத்தை நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது.