#BREAKING : சென்னை மக்களே…! போகி தினத்தன்று மறந்தும் இதை செய்து விடாதீர்கள்..! மீறினால் ரூ.1,000 அபராதம்..! – சென்னை மாநகராட்சி

போகியன்று விதிகளை மீறி டயர், பிளாஸ்டிக்கை பொதுமக்கள் எரிக்ககூடாது மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  பொதுவாக போகி தினத்தன்று பொதுமக்கள், தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருட்கள், டயர்கள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம். இந்நிலையில், போகியன்று விதிகளை மீறி டயர், பிளாஸ்டிக்கை பொதுமக்கள் எரிக்ககூடாது மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு விதிகளை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் அல்லது டயர் போன்ற பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.