எச்சரிக்கை : 6 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணூர், கடலூர், தூத்துக்குடி,  நாகை,  பாம்பன் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், அதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் இது 3-ஆம் தேதி புயலாக வலுப்பெற்று, மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். பின் வடமேற்கு திசையில் … Read more

நாகை, கடலூர் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் …!

நாகை, கடலூர் மற்றும் எண்ணூர் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நாளை காலை கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை அடுத்து நாகப்பட்டினம், எண்ணூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் … Read more

தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!

தமிழகத்தில் உள்ள எண்ணூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவானது. இது ஞாயிற்றுக்கிழமை வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. வங்கக்கடலில் வலுவடைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி காரணமாக, வட மேற்கு வங்கக்கடல், மேற்கு வங்கம் மற்றும் … Read more

பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் ! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

கடந்த 4 நாட்களாக ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனிடையே வங்க தேசத்துக்கும் வங்கக்கடலுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் ராமேசுவரம், பாம்பன், … Read more

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

வங்கதேசம் அருகே கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதோடு கடல் சீற்றமாக காணப்படும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.