#BREAKING : தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் – பள்ளிக்கல்வி ஆணையர்

தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.  10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான கால அட்டவணையில் மூன்றாவதாக விருப்பமொழி என்ற தேர்வு கொடுக்கப்பட்டது. இது எதற்காக கொடுக்கப்பட்டது  என்றால், தமிழை தாய்மொழியாக கொள்ளாத மாணவர்களுக்காக தான் இந்த விருப்பமொழி தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பள்ளி கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர்,  தமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும். தாயமொழி … Read more

#Holiday : மாணவர்களுக்கு குஷியான செய்தி..! தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை…!

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து ஏப்-16-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு. தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து ஏப்-16-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்-18 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.