முதல் முறையாக இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையே டி20 தொடர்..!

முதல் முறையாக டி20 தொடர் :

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் 2024 ஜனவரியில் நடைபெறயுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மொஹாலியில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி ஜனவரி 14-ம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்திலும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஜனவரி 17-ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்திலும் நடைபெறும். இரு அணிகளுக்கும் இடையே டி20 தொடர் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

ஐசிசி உலகக்கோப்பையை போட்டிகள் மற்றும் ஆசிய உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும் இரு அணிகளுக்கு மோதி வந்தன. கடந்த 2018ஆம் ஆண்டு இரு அணிகளும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான்:

2023 உலகக் கோப்பையில் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதியின் தலைமையில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக செயல்பட்டது. ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெறும் நிலைக்கு மிக அருகில் வந்தது. ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்ததால் அரையிறுதிக்கு செல்லும் ஆப்கானிஸ்தான் கனவு நிறைவேறவில்லை.

author avatar
murugan