ஸ்விட்ஸ்.நாட்டில் தொடங்கியது உலக பொருளாதார மாநாடு…!!

ஸ்விட்சர்லாந்தில் 4 நாட்களாக உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகின்றது.

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில்  49ஆவது உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகின்றது.இந்த மாநாட்டில் பல்வேறு விவகாரம் குறித்து விரிவாக 4 நாட்கள் விவாதிக்கப்படும். இந்த மாநாட்டின் முதல் நாளில் சர்வதேச பொருளாதாரம் , பருவநிலை மாற்றம் , தொழில்நுட்ப கண்டு பிடிப்பு மற்றும் தகவல் மேலாண்மை குறித்த பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கின்றது.

இந்த மாநாட்டில் சீனா  முன்வைத்துள்ள சாலை வசதி , நிலையான வசதி குறித்த விவகாரம் விவாதிக்கப்படட இருப்பதால் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகளை வெகுவாக கவர்ந்துள்ளது.இது குறித்து  விரிவான விவாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment