பப்ஜி வீரர்களா நீங்கள்!!!இதோ உங்களுக்கான போட்டியை நடத்தும் இணையதளம்

61

உலகம் முழுவதும் மட்டும் அல்லாமல் இந்தியாவும்  தற்போது ஸ்மார்ட் போன் என்ற சிறிய உலகத்தில் பயணித்து வருகிறது.2017 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் அறிமுகமான பப்ஜி(PUBG -playerUnknown’s Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் உட்பட அனைத்து  தரப்பினரின் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் பப்ஜி விளையாடுபவர்களுக்காக  War90.com என்ற இணையதளம்  போட்டி ஒன்றை நடத்திவருகிறது.இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு  நிர்ணயிக்கப்பட்ட பரிசு தொகை வழங்கப்படும் என்று தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டில் பொருட்களை வாங்குவதன் மூலமாக பப்ஜி நிறுவனம் ஒரு நாளைக்கு 600 டாலர் வருமானம் பெற்று வருகிறது.

இந்த விளையாட்டை இந்தியா முழுவதும் தடை  செய்ய வலியுறுத்தி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.இதன்விளைவாக  பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.