மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு ரத்து.., உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

கடந்த 2018-ல் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கான 16% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் 50% மேல் மொத்த இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்ற 1992 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், மராத்தா சமூகத்தினருக்கு 50 சதவீதத்திற்கு மேல் கூடுதலாக 16% இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீட்டை வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.

மராத்தா சமூகத்தினருக்கு அதிக இடஒதுக்கீட்டை வழங்க எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். 1992 ஆம் ஆண்டில் 50% மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று வழங்கப்பட்ட   தீர்ப்பை மாற்றி அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 60 % மேல் இடஒதுக்கீடு உள்ளது. இந்த இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பின் கீழ் வருமா என்றால் வராது. காரணம் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசன பாதுகாப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan