#Breaking : எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுவை இன்னும் விற்பது ஏன்…? உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி…!

கொரோனா அலை வேகமாக பரவி வரும் நிலையில், எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுவை இன்னும் விற்பது ஏன்?

கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ‘கொரோனா அலை வேகமாக பரவி வரும் நிலையில், எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுவை இன்னும் விற்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக மத்திய உள்துறை செயலர், தமிழக உள்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவை தடுக்க மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கை ஜூன்-4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.